பஹாமாஸில் கடந்த இரு வாரங்களாக நடைபெற்றுவந்த இளையோர் கொமன்வெல்த் போட்டிகள் கடந்த திங்கட்கிழமை நிறைவுக்கு வந்தன.
இதில் 23 தங்கப்பதக்கங்கள், 16 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 12 வெண்கலப் பதக்கங்களை வென்ற இஙகிலாந்து முதலிடத்தைப் பிடித்துக்கொண்டது.
இலங்கை இம்முறை இளையோர் கொமன்வெல்த் போட்டிகளில் ஆறு போட்டிப் பிரிவுகளில் பங்கேற்றது. அதற்காக 27 வீர, வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
இந்தப் போட்டித் தொடரில் இலங்கை இரு ெவள்ளிப்பதக்கங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
50 மீற்றர் மற்றும் 100 மீற்றர் ப்ரீஸ்டைல் நீச்சல் போட்டிகளிலேயே கேல் அபேசிங்க இந்த இரு பதக்கங்களையும் வென்று கொடுத்தார்.
ஆனாலும் கடந்த 2015ஆம் ஆண்டு நடைபெற்ற இளையோர் கொமன்வெல்த் போட்டிகளில் இலங்கை 4 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 2 வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தது.
ஆனால் இம்முறை இரண்டு வெள்ளிப் பதக்கங்களை மாத்திரமே வென்றுள்ளது. அடுத்த ஏழாவது இளையோர் கொமன்வெல்த் போட் டிகள் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு அயர்லாந்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment