சிறுநீரக மோசடி இடம்பெற்று வருகின்றமை காரணமாக இந்தியர்களுக்கு இலங்கையில் சத்திரசிகிச்சை மேற்கொள்வதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரச தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், மாலைதீவிற்கு இது ஏற்புடையதல்ல எனவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்கள இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மாலைதீவு சுகாதார அமைச்சர் அப்துல் ஹபீம் இப்ராகிம்மை நேற்று அமைச்சர் ராஜித சேனாரத்ன சந்தித்து கலந்துரையாடிய போது இந்த விடயத்தை அவர் சுட்டிக்காட்டியதாகவும் கூறப்படுகிறது.

Post a Comment