அத்தியாவசிய சேவையாக்கப்பட்டுள்ள எரிபொருள் விநியோகத்தை இராணுவம் மேற்கொள்ளவுள்ளதாக என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கை இன்று காலை முதல் மேற்கொள்ளப்படவுள்ளது.
கனியவள ஊழியர்கள் நேற்று முன்தினம் முதல் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால், நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் நிரப்பும் பணிகள் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
இதனால், நேற்று முன்தினம் இரவு முதல் பிரதான நகரங்கள் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், எரிபொருள் விநியோகத்தை அத்தியாவசிய சேவையாக கருதி, ஊழியர்களின் பணிப்புறக் கணிப்பின்போது, இராணுவத்தால் அந்தப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது.

Post a Comment