புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், பிரதான சந்தேக நபரான சுவிஸ் குமாரை தப்பிக்க வைத்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ள, மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜெயசிங்கவின் விளக்கமறியல் எதிர்வரும் 8ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்றில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, லலித் ஜெயசிங்க சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள், சுவிஸ்குமாரை மக்கள் கட்டி வைத்திருந்தபோது அந்த இடத்தில், இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரன் சென்று பார்வையிடும் காணொலியை நீதிபதிக்கு காண்பித்தனர்.
நீதிபதி மேற்படி காணொலி தொடர்பில் விசாரணை நடத்தி அடுத்த வழக்குத் தவணையின் போது அறிக்கை சமர்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

Post a Comment