Ads (728x90)

சந்தானம் நடித்துவரும் ‘சக்க போடு போடு ராஜா’ படத்தில், காமெடியனாக விவேக் நடித்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘சக்க போடு போடு ராஜா’. ராம்பாலாவுக்குப் பிறகு ‘லொள்ளு சபா’வை இயக்கிய சேதுராமன், இந்தப் படத்தை இயக்கி வருகிறார். விடிவி கணேஷ் தயாரிக்கிறார். வைபவி ஷாண்டில்யா, சந்தானத்தின் ஜோடியாக நடிக்கிறார். தன்னுடைய நண்பனுக்காக, முதன்முறையாக இசையமைக்கிறார் சிம்பு. காமெடியனாக விவேக் நடித்துள்ளார்.

“விவேக் சார் ரொம்ப எளிமையானவர். அவருக்கும், சந்தானத்துக்கும் ஏகப்பட்ட காம்பினேஷன் காட்சிகள் இருக்கின்றன. சமயங்களில் அவருடைய எண்ணங்களையும் பரிந்துரைப்பார். அதேசமயம், நாங்கள் சொல்வதையும் ஏற்றுக் கொள்வார். மிகப்பெரிய காமெடியன் மட்டுமே இந்த கேரக்டரைச் செய்ய முடியும். எங்களுக்கு விவேக் சார் கிடைத்திருக்கிறார்” என்கிறார் சேதுராமன்.

Post a Comment

Recent News

Recent Posts Widget