கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் மலையாளத்தில் மல்யுத்தத்தை மையமாக வைத்து 'கோதா' என்கிற படம் வெளியானது.. இன்னும் கூட சில தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. 'தங்கல்' பாணியில் பெண் மல்யுத்த வீராங்கனையை பற்றிய படமாக உருவான இதில் இளம் நடிகர் டொவினோ தாமஸும், நடிகை வாமிகாவும் நடித்திருந்தனர். ஏற்கனவே 'குஞ்சிராமாயணம்' என்கிற காமெடி படத்தை முதன்முதலாக இயக்கி ரசிகர்களின் கவனம் ஈர்த்த இளைஞர் பஷில் ஜோசப் இயக்கிய இரண்டாவது படம் இது.
இரண்டு படங்களையும் வெற்றிப்படமாக்கிய பஷில் ஜோசப்புக்கு இன்று சிறப்பான முறையில் திருமணம் நடைபெற்றது.. இந்த திருமண நாளில் பஷில் ஜோஷப்புக்கு மிகப்பெரிய பரிசு ஒன்றை அளித்துள்ளார் மெகாஸ்டார் மம்முட்டி.. ஆம். தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பஷில் ஜோசப்புக்கு வழங்கியுள்ளார்..
இதில் 'கோதா' நாயகன் டொவினோ தாமஸும் மம்முட்டியுடன் இணைந்து நடிக்கிறார். துல்கர் சல்மான் நடித்த 'சார்லி' படத்திற்கு கதை எழுதிய ஆர்.உன்னி தான் இந்தப்படத்திற்கும் கதை எழுதுகிறார். இந்த தகவலை பஷில் ஜோசப், இன்று திருமண வைபவம் இன்று துவங்குவதற்கு முன்பே தனது முகநூலில் பதிவிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment