'கைதி நம்பர் 150' படத்தின் வெற்றிக்குப் பிறகு சிரஞ்சீவி, 'உய்யலவாடா நரசிம்ம ரெட்டி' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கான பூஜை இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. படத்தை சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் தேஜா பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். சிரஞ்சீவியின் முந்தைய படத்திலும் அவரை நடிக்கக் கேட்டிருந்தனர், அப்போது நடிக்க மறுத்த இப்போது சம்மதித்துள்ளார். அவருக்கு மிகப் பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிரஞ்சீவியே அவரிடம் நேரடியாக படத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதால் அவர் நடிக்க சம்மதித்துள்ளார் என்கிறார்கள்.
டோலிவுட் வட்டாரங்களில் இப்படத்தில் மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என செய்திகள் பரவியது. ஆனால், தயாரிப்பு தரப்பில் அதற்கான எந்த ஒரு பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. விஜய் சேதுபதி இப்படத்தில் நடிக்கவில்லை என்று அறிவித்துள்ளார்கள்.
ஏ.ஆர்.ரகுமானிடம் தொடர்ந்து இசையமைக்கப் பேசி வருவதாகவும், அவர் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்கள். ஆகஸ்ட் 22ம் தேதியன்று சிரஞ்சிவியின் பிறந்த நாளில் இப்படத்தின் தலைப்பு லோகோ, முதல் பார்வை ஆகியவை வெளியாக உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment