Ads (728x90)

பிக்பாஸ் வீட்டிலிருந்து இறுதியாக வெளியேற்றப்பட்டவர் நடிகர் சக்தி. தற்போது இவர் நிகழ்ச்சி முழுவதையும் பார்த்துவிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார். அதில், பிக்பாஸ் பார்வையாளர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும் பெண்களுக்கு எதிராக ஏதாவது கருத்தை தான் தெரிந்தோ தெரியாமலோ கூறியிருந்தால் அதற்கு உலகம் முழுவதிலும்  உள்ள பெண்களிடம் வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும் பிக்பாஸ் வீடு பல புதிய அனுபவங்களை தந்ததாகவும்,  தினமும் ஒன்றரை மணி நேரம் மட்டும் நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் இதன் மூலம் மட்டுமே யார் நல்லவர்?  அல்லது யார் கெட்டவர் என்பதை தீர்மானிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
 
தற்போதுதான் தனக்கு ரியல் கேம் ஆரம்பித்துள்ளதாகவும், அதேநேரத்தில் எல்லா பிரச்சனைகளுக்கும் பதில் சொல்ல தான்  தயாராக இல்லை என்றும் கூறியுள்ளார். இதற்காக தொலைக்காட்சி மற்றும் பிக்பாஸ் குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget