Ads (728x90)

இலங்கை சந்தையில் மோட்டார் வாகனங்கள் சிலவற்றின் விலைகள் தற்போது குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய 800CC வகை மோட்டார் வாகனங்களின் விலைகளே இவ்வாறு குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த ரக மோட்டார் வாகனங்களை விற்பனை செய்யும் Associated Motorways (Private) Ltd என்ற நிறுவனத்தின் தலைமையமான AMW Capital Leasing And Finance PLC நிறுவனம் தங்கள் சமூக வலைத்தள பக்கங்களில் இந்த விலை குறைப்பு பற்றி பிரச்சாரம் செய்துள்ளது. தமது நிறுவனத்தில் விற்பனை செய்யப்படும் Suzuki, Datsun, Renault என்ற வாகனங்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget