Ads (728x90)

வடக்கு, கிழக்கில் புத்தர் சிலை நிர்மாணிப்பது தொடர்பில் அமெரிக்க அரச திணைக்களம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது.

அமெரிக்க அரச திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள மத ரீதியான சுதந்திரம் என்ற அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த தேரர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல் மேற்கொள்வதாகவும், அவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பௌத்த குழுக்கள் மற்றும் இராணுவத்தினரால் வடக்கு, கிழக்கில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு ஏகாதிபத்தியக் கொள்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரசசார்பற்ற அமைப்புகள் மற்றும் அரசியல்வாதிகளினால் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்கள் தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தம் எனவும், சிறிய அளவிலான பௌத்தர்களுக்காக புத்தர் சிலைகள் நிறுவப்பட்டுள்ளதாக அமெரிக்க அரச திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

Post a Comment

Recent News

Recent Posts Widget