ஊழலற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம் என பிரதமர் மோடி தெரிவித்தார்.
டில்லியில் நிதி ஆயோக் ஏற்பாடு செய்திருந்த இளம் தொழில் முனைவோர் மற்றும் தலைமை செயல் அதிகாரிகள் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: நாட்டில் ஊழல் ஒரு அமைப்பு போல் இயங்க ஆரம்பித்துள்ளது. இது நாட்டின் துரதிர்ஷ்டம். இதற்கு மாற்றாக அமைப்பு ஒன்றை உருவாக்காவிட்டால் ஊழலை ஒழிக்க முடியாது. நாடு முழுவதும் பரவிக்கிடக்கும் லஞ்சம், ஊழலை ஒழிக்க மத்திய பா.ஜ., அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் சராசரி மனிதர்களின் பிரச்னைகளை குறைக்க முடியும்.
இடைத்தரகர்களுக்கு இப்போது வேலையில்லை என்பதால் அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள்தான் வேலையில்லா திண்டாட்டம் என தற்போது கத்திக்கொண்டிருக்கிறார்கள்.
ஏற்றத்தாழ்வுகள் எதுவும் பார்க்காமல், அனைவரும் ஒன்றாக இணைந்து, நாட்டின் முன்னேற்றத்திற்காக உழைக்க வேண்டும். மாற்றம் என்ற ஒன்று நாடு முழுவதும் ஏற்படும்போது, நாமும் அந்த மாற்றத்திற்கு ஏற்ப மாற வேண்டும். ஊழலற்ற புதிய இந்தியாவை உருவாக்குவதற்கு அரசின் பங்களிப்பு மட்டும் இருந்தால் போதாது. நாட்டு மக்கள் அனைவரின் ஒத்துழைப்பும் அவசியம். இவ்வாறு அவர் பேசினார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment