இலங்கை – பாகிஸ்தான் அணிகள் விளையாடவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியை பகலிரவு போட்டியாக நடத்த திட்டம் உள்ளதாக இலங்கைக் கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.
அதேவேளை கடைசி இருபதுக்கு 20 போட்டியை கராச்சி அல்லது லாகூரில் நடத்தவும் எண்ணியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
தற்போது டெஸ்ட் போட்டிகளுக்கு பார்வையாளர்கள் குறைந்து வருகிறார்கள். அதனால் பகலிரவு டெஸ்ட் போட்டிகளை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. அந்தவகையில் இதுவரையில் நான்கு பகலிரவு டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இந்நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் பகலிரவு டெஸ்ட் போட்டி நேற்று ஆரம்பமானது.
இங்கிலாந்து அணி விளையாடும் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி இதுதான். இங்கிலாந்தில் நடைபெறுகிற முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியும் இதுதான். மேற்கிந்தியத் தீவுகள் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியுள்ளது.
இதனால் இலங்கை -– பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலும் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Post a Comment