Ads (728x90)

சபரிமலையில், நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, நடை திறந்ததும், நெய் அபிஷேகத்தை, தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரரு துவக்கி வைத்தார். தொடர்ந்து, கணபதி யாகம் நடந்தது. காலை, 7:00 மணிக்கு, உஷ பூஜை, மதியம், 12:30 மணிக்கு, உச்ச பூஜை நடந்தது. மாலை, 5:00 மணிக்கு நடை திறந்து, 6:30 மணிக்கு தீபாராதனை நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, படி பூஜை, 9:00 மணிக்கு, அத்தாழ பூஜைகளுக்கு பின், 10:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. ஆக., 21 வரை, பூஜைகள் நடக்கும். இந்நாட்களில், சகஸ்ர கலசம், களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடக்கும்.சதுர்த்தியை முன்னிட்டு, பம்பையில், விநாயகர் திருவிழா நேற்று துவங்கியது. ஆக., 26 வரை, தினமும் காலையில், கணபதி யாகம், பிரார்த்தனை ஜெபம் நடக்கும். ஆக., 26ல், பம்பை திருவேணி சங்கமத்தில், விநாயகர் சிலை கரைக்கப்படும்.

Post a Comment

Recent News

Recent Posts Widget