சிபாரிசுக்கு அர்த்தம் தெரியாத ஷாரூக்கான்
பாலிவுட்டில் கடந்த இரண்டு வாரங்களாக சிபாரிசு பற்றி பல்வேறு திரைப்பிரபலங்கள் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஷாரூக்கானிடம் சினிமாவில் சிபாரிசு குறித்து கேட்டபோது, அவர் கூறியதாவது... "பாலிவுட்டில் சிபாரிசு பற்றி எனக்கு தெரியாது. முதலில் அதன் அர்த்தம் எனக்கு புரியவில்லை. டில்லியில் பிறந்த நான், அங்கிருந்து 25 வயதில் மும்பைக்கு வந்தேன். அனைவரும் என்னை விரும்பி ஒரு நடிகனாக ஏற்று கொண்டனர். ஆகையால் சிபாரிசு பற்றி எனக்கு எதுவும் தெரியாது" என்று கூறியுள்ளார்.

Post a Comment