திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 2,780 கிலோ தங்கம் பேங் ஆஃப் இந்தியா கிளையில் டெபாசிட்டாக முதலீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு கடந்த மே மாதம் வரை 2,780 கிலோ தங்கத்தை பக்தர்கள் காணிக்கையாக வழங்கியுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதில் 705 கிலோ தங்கம் சுத்தமான தங்க கட்டியாக மாற்றப்பட்டுள்ளதாக கோவில் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு 2.5 சதவீத வட்டியுடன் மீண்டும் திரும்ப பெறும் வகையில், பேங் ஆஃப் இந்தியா கிளையில் முதலீடு செய்துள்ளதாக தேவஸ்தான நிதி துறை அலுலலர் பாலாஜி தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சார்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் குறுகிய கால முதலீடாக 2075 கிலோ தங்க கட்டிகள் முதலீடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஜனவரி முதல் மே மாதம் வரையிலான 5 மாதத்தில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகளை மும்பையில் உள்ள மிண்ட் நிறுவனத்தின் மூலமாக கரைக்கப்பட்டு 705 கிலோ சுத்தமான தங்க கட்டிகளாக மாற்றினர்.
தொடர்ந்து, 2075 கிலோ தங்கத்துடன் தற்போது கட்டிகளாக மாற்றப்பட்ட 705 கிலோ தங்கமும் சேர்த்து தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் 12 ஆண்டுக்கால நீண்ட நாள் முதலீடாக வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment