Ads (728x90)

 குபேரனுக்கு என்று தனியாக சிலை வழிபாடு வீட்டில் செய்வது கிடையாது. சங்கநிதி-பதுமநிதி சமேத குபேரனுக்கு மகாலட்சுமியிடமிருந்து தனம் கொட்டுகிற வகையில் நிறைய படங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அந்தப் படங்களில் லக்ஷ்மி குபேர மந்திரமும் அச்சடிக்கப்பட்டுள்ளது. ஒருசில படங்களில் மகாலக்ஷ்மி யந்திரமும் பொறிக்கப்பட்டுள்ளது. அதுபோன்ற படங்களை வியாபாரத் தலங்களில் மாட்டி வைக்கலாம். வீட்டுப் பூஜையறையிலும் வைத்து பூஜிக்கலாம்.

 மற்றபடி சிரித்தமுகத்துடன் காணப்படும் ஹேப்பிமேன் பொம்மையினை நீங்கள் வீட்டினில் எங்கு வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அதனைக் காணும்போது மனதில் மகிழ்ச்சி உண்டாவதால் வீட்டிற்குள் இருக்கும் மாடங்களில் ஆங்காங்கே அவற்றை இடம்பெறச் செய்யலாம். குபேரனுக்கு என்று தனியாக சிலை வைத்து வீட்டினில் வழிபடும் முறை நம் வழக்கத்தில் இல்லை

.

Post a Comment

Recent News

Recent Posts Widget