Ads (728x90)


131 ஆண்டுகளுக்கு முன்பாக தொழில்நுட்பம் வளராத காலக்கட்டத்தில் ஸ்பெயினில் 17 வயது இளம் வானியலாளர் யுவான் வால்டரமா அகுய்லார் என்பவர் சூரியனில் வெடித்த நெருப்புப் பிழம்பை தனது தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்து பதிவு செய்துள்ளதாக விஞ்ஞானிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 10, 1886-ம் ஆண்டு சூரியனில் தோன்றிய இந்தத் திடீர் நெருப்புப் பிழம்பின் படம் ஒன்று அப்போதைய பிரெஞ்ச் இதழான L’Astronomie-யில் வெளியானது தெரியவந்துள்ளது.

அப்போது 17 வயதே ஆன வானியல் ஆர்வலரான யுவான் வால்டெரமா அகுய்லார் கைவசம் இருந்தது 6 செமீ துளை மட்டுமே கொண்ட சிறிய தொலைநோக்கி மட்டுமே.

ஸ்பெயின் எக்ஸ்ட்ரீமடூரா பல்கலைக் கழகத்தின் சொற்பொழிவாளர் ஜோஸ் மனுவெல் வாகிரோ என்பவர் கூறும்போது, “வால்டெரமா கண்டுபிடிப்பு தனித்துவமானது. முற்றிலும் அரிய வானியல் நிகழ்வு ஒன்றை அவர் ஒருவர் மட்டுமே அப்போது பார்த்துள்ளார். இதுநாள் வரை அதுதான் சூரிய நெருப்புப் பிழம்பு என்று ஒருவரும் அதனை உணரவில்லை.

சூரியவெளியில் திடீரென ஒரு பிரகாசம் தோன்றியதை 17 வயதில் சிறிய தொலைநோக்கியில் கண்டு விவரித்துள்ளார் வால்டெரமா.

17 வயதில் இதனைக் கண்டுபிடித்ததே அதிசயம் ஆனால் அதோடு நின்று விடாமல் தன் கண்டுபிடிப்பை அயல்நாட்டு இதழுக்கும் அனுப்பியது மேலும் அதிசயிக்கத்தக்கது என்று வானியல் அறிவியல் உலகம் வால்டெரமாவை விதந்தோதி வருகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget