Ads (728x90)

வங்கதேச அணிக்கு எதிரான 2-வது டி 20 ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் டேவிட் மில்லர் 35 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார்.

போட்செஃப்ட்ரூம் நகரில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்க அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 224 ரன்கள் குவித்தது. ஆல்ரவுண்டரான டேவிட் மில்லர் 36 பந்துகளில் 101 ரன்கள் விளாசினார். அவர் தனது சதத்தை 35 பந்துகளில், 9 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் அடித்திருந்தார்.

இதன் மூலம் சர்வதேச டி 20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் விரைவாக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் டேவிட் மில்லர். இதற்கு முன்னர் கடந்த 2012-ம் ஆண்டு நியூஸிலாந்துக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் ரிச்சர்ட் லெவி 45 பந்துகளில் சதம் விளாசியதே சாதனையாக இருந்தது. டேவிட் மில்லர், 19-வது ஓவரின் முதல் 5 பந்துகளையும் சிக்ஸராக விளாசி மிரட்டினார். இந்த ஓவரை சைபுதின் வீசினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget