Ads (728x90)

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்­னாள் அரச தலை­வர் மகிந்த ராஜ­பக்­ச­வுக்­கும் இடை­யில் விரை­வில் சந்­திப்பு நடை­பெ­ற­வுள்­ளது.
புதிய அர­ச­மைப்பு, உள்­ளூ­ராட்சி சபைத் தேர்­தல் உள்­ளிட்ட விட­யங்­க­ளில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் நிலைப் பாட்டை மகிந்த அணி­ கடு­மை­யாக விமர்­சித்து வரு­கின்­ற­னர்.

சுதந்­தி­ரக் கட்­சி­யின் மூத்த அமைச்­சர்­க­ளின் இணக்­கப்­பாட்­டு­டன் இந்­தச் சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது என்­றும், இணைந்து பய­ணிக்க வரு­மாறு மகிந்த அணிக்கு அரச தலை­வர் மைத்­திரி இந்­தச் சந்­திப்­பில் அழைப்பு விடுப்­பார் என­வும் தெரி­ய­ வ­ரு­கின்­றது.

மகிந்­த­வுக்­குச் சார்­பா­கச் செயற்­பட்­டு­வ­ரும் தொகுதி அமைப்­பா­ளர்­க­ளி­ட­மி­ருந்து அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன பத­வி­க­ளைப் பறித்­த­தால் இந்­தச் சந்­திப்பு நடை­பெ­றாது என்றே முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.
எனி­னும், மூத்த உறுப்­பி­னர்­கள் தலை­யிட்­ட­தால் திட்­ட­மிட்­ட­படி சந்­திப்பு நடை­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது.


Post a Comment

Recent News

Recent Posts Widget