Ads (728x90)


கூட்­டு­வன்­பு­ணர்­வின் பின்­னர் படு­கொலை செய்­யப்­பட்ட புங்­கு­டு­தீவு மாணவி வித்­தி­யா­வின், சகோ­த­ரி­யை­யும், தாயா­ரை­யும் அரச தலை­வர் வவு­னி­யா­வில் நேற்­றுச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னார்.

அவர்­க­ளுக்கு வவு­னி­யா­வில் அரச செல­வில் வீடு ஒன்று அமைத்­துக் கொடுக்­கப்­பட்­டது. ஆனால் அதற்­கான உறு­திப் பத்­தி­ரங்­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை.

நேற்று வவு­னி­யா­வில் நடந்த நிகழ்­வில் காணி உறு­திப்­பத்­தி­ரம் வித்­தி­யா­வின் தாயா­ரி­டம் கைய­ளிக்­கப்­பட்­டது.

அதன் பின்­னர் அந்த வீட்­டுக்கு அரச தலை­வர் சென்­றார் என்று அரச தலை­வர் ஊட­கப் பிரிவு தெரி­வித்­தது. அது தொடர்­பான ஒளிப்­ப­டங்­க­ளை­யும் அனுப்பி வைத்­தது.

மாணவி வித்­தி­யா­வின் மூத்த சகோ­த­ரி­யின் உயர் கல்­விக்­கும் அவ­ரது குடும்­பத்­தின் எதிர்­கா­லத்க்­கா­திற்­கா­க­வும் இயன்­ற­ளவு உத­வி­களை வழங்­கு­வ­தாக அரச தலை­வர் குறிப்­பிட்­டார்.

மாணவி வித்­தி­யா­வின் கொலைக்கு சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­காக அரச தலை­வர் வழங்­கிய உதவி குறித்து வித்­தி­யா­வின் தாயார் அரச தலை­வ­ருக்கு நன்றி தெரி­வித்­தார்.

இவ்­வாறு அந்த ஊடக அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.
வித்­தியா கொலை­யின் பின்­னர் யாழ்ப்­பா­ணத்­தில் வசிப்­ப­தற்கு தமக்கு அச்­சு­றுத்­த­லாக இருப்­ப­தாக வித்­தி­யா­வின் தாயார் கூறி­யி­ருந்­தார்.

2015 ஆம் ஆண்டு வித்­தி­யா­வின் தாயார் யாழ்ப்­பா­ணத்­தில் வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தின் அரச தரை­வ­ரைச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­ய­போது வவு­னி­யா­வில் வீடு அமைத்­துத் தரு­வ­தாக அரச தலை­வர் உறு­தி­ய­ளித்­தி­ருந்­தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget