Ads (728x90)


நீங்கள் ரயில் நிலையம் போனாலும், விமான நிலையம் சென்றாலும், இப்போதெல்லாம் இலவச வைஃபை வசதி கிடைக்கிறது. காத்திருக்கும் சமயத்தில் இலவசமாக கிடைக்கும் வைஃபை வசதியை பயன்படுத்திக் கொள்வது சரிதானே?

ஆனால், இனிமேல் இதுபோன்ற இலவச வைஃபை வசதியை பெற்று பயன்படுத்தும் நீங்கள், அதை வெகு கவனத்துடன் கையாள வேண்டும்

காரணம், பொது இடங்களில் வழங்கப்படும் வைஃபை இணைய வசதியை பயன்படுத்தும் போது, சைபர் கிரைம் எனப்படும் இணையம் சார்ந்த குற்றச் செயல்கள் அதிகம் நடக்க வாய்ப்பு இருப்பதாக,  இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் (ICERT) எச்சரித்துள்ளது.

இணையதளம் வாயிலாக தகவல்களைத் திருடுபவர்கள், வங்கி மற்றும் கிரெடிட் கார்டு அடையாள எண், பாஸ்வேர்டு போன்றவற்றை திருடி பணத்தை கொள்ளையடிப்பவர்களுக்கு, இதுபோன்ற பொது இடங்களில் பயன்படுத்தும் வைஃபை கூடுதல் வசதியை ஏற்படுத்திக் கொடுக்கிறது. தகவல் திருடப்படும் நபரும், திருடும் நபரும் ஒரே வைஃபை வளையத்திற்குள் இருப்பதால், தகவல் திருட்டு எளிது என எச்சரிக்கிறது இந்தியன் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம்.

பார்க், அபார்ட்மென்ட் என பொது இடங்களில் இலவச வைபை வசதிகள் தற்போது அதிகரித்து வருகின்றன. கணினி யுகத்தில், இதுபோன்ற இணைய வசதியைப் பெறுவதில் மக்களிடம் ஆர்வம் காணப்படுகிறது. பொதுவான தகவல்களைத் தேடுவது தொடங்கி, இசை, சினிமா, வீடியோ, புகைப்படங்களை காண்பது வரை பல வித தேவைகளுக்கு இதை பயன்படுத்திக் கொள்கிறோம். ஆனால், தகவல்களைப் பதிவிடுவது, வங்கி உட்பட மிக முக்கிய கணக்குகளை, பொது வைஃபையை பயன்படுத்திக் கையாள்வது ஆபத்தானது என்கின்றனர் இணையம் சார்ந்த நிபுணர்கள்.

Post a Comment

Recent News

Recent Posts Widget