
மோகன்லாலின் ஆஸ்தான இயக்குனராக அறியப்படும் பி.உன்னிகிருஷ்ணன் நான்காவது முறையாக மோகன்லாலை வைத்து இயக்கியுள்ள படம் இது. இதற்கு முன்பு மூன்று வருடங்களுக்கு முன் மோகன்லாலை வைத்து 'மிஸ்டர் பிராட்' படத்தை இயக்கிய இவர், அடுத்ததும் மோகன்லால் படத்தைத்தான் இயக்குவேன் என காத்திருந்து இந்தப்படத்தை இயக்கியுள்ளார்.
அடுத்ததாக தமிழில் மட்டுமே இதுவரை நடித்துவந்த விஷால் இந்தப்படத்தின் மூலம் முதன்முதலாக மலையாளத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். இந்தப்படத்தில் விஷாலுக்கு வில்லன் கேரக்டர் என்று சொல்லப்பட்டாலும், அதுகுறித்த சஸ்பென்ஸ் இப்போது வரை நீடிக்கிறது..
விஷால் மட்டுமல்ல, ஹன்ஷிகாவும், நடிகை ராசி கன்னா மற்றும் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் ஆகியோரும் இந்தப்படத்தின் மூலம் மலையாள சினிமாவை ருசிபார்க்க களத்தில் குதித்துள்ளனர்.
தவிர மஞ்சு வாரியர் படத்தின் கதாநாயகியாக மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது இன்னொரு சிறப்பு.
Post a Comment