Ads (728x90)

யாழ்ப்­பாண மாவட்ட காணி­சம்­பந்­த­மான சிறப்பு மத்­தி­யஸ்த்­தா்­களை ஜரோப்­பிய ஆணைக்­குழு அதி­கா­ரி­கள் யாழ்ப்­பாண செய­ல­கத்­தில் சந்­தித்­துள்­ள­னா்.

ஜரோப்­பிய ஆணைக்­கு­ழு­வின் மூத்த ஆலோ­ச­கா் எஸ்.சீத­பொன்­க­லன் தலை­மை­யில் மூன்று பேர் கொண்ட வெளி­நாட்­ட­வர்­களே நேர­டி­யா­கச் சந்­தித்து கலந்­து­ரை­யா­டி­னர்.

இதன் போது ஜரோப்­பிய ஆணைக்­குழு மூத்த ஆலோ­ச­கா் எஸ்.சீத­பொன்­க­லன் தெரி­வித்­த­தா­வது; இலங்­கைக்கு 40 மில்­லி­யன் யூரோ நிதி நன்­கொ­டை­யாக வழங்­க­வுள்­ளோம். இதில் உள்­ளு­ராட்சி சபை­க­ளின் அபி­வி­ருத்தி மத்­தி­யஸ்த சபை (காணி) மற்­றும் சன­ச­மூக மத்தி­யஸ்த சபை­க­ளின் அபி­வி­ருத்­திப் பயிற்சி மற்­றும் விட­யங்­க­ளுக்­கும் ,பால் நிலை­ச­மத்­து­வத்­துக்­கும் இந்த நிதி பகி­ரப்­ப­டும் என்­றாா்.

இதில் கலந்து கொண்ட காணி சம்­பந்­த­மான சிறப்பு மத்­தி­யஸ்­தா்­கள் தமது கருத்­துக்­க­ளை­யும் முன்­வைத்­த­னர்.

”காணி சம்­பந்­த­மான சிறப்பு மத்­திய சபைக்­குப் பொருத்­த­மான கட்­ட­டம் ,தள­பா­டம் என்­ப­வற்­று­டன் பிணக்­குக்கு வரு­ப­வர்­க­ளுக்­கான வச­தி­களை வழங்க வேண்­டும். மத்­தி­ய­ஸ்தர்­க­ளுக்­கான கொடுப்­ப­னவு அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும். என்­ப­து­டன் வெளி­நாட்­டுப் பயிற்­சி­க­ளும் வழங்­கப்­பட வேண்­டும். சன­ச­மூக மத்­தி­யஸ்த சபைத் தவி­சா­ளர்­க­ளுக்கு மின்­னி­யல் சாத­னங்­கள் வழங்­கு­வ­து­டன் மத்­தி­யஸ்­தர்­க­ளின் கொடுப்­ப­ன­வும் அதி­க­ரிக்­கப்­பட வேண்­டும்” என்று அந்­தக் கருத்­துக்­கள் அமைந்­தி­ருந்­தன.

யாழ்ப்­பண மாவட்­டக் காணி­சம்­பந்­த­மான சிறப்பு மத்­தி­யஸ்­தர்­கள் சார்­பில் மூத்த ஒருங்­கி­ணைப்­பா­ளர் சனா­தன சர்மா மத்­தி­யஸ்த்­தர்­க­ளது நலச்­சே­வை­கள் குறித்து விளக்­கி­னார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget