இந்தோனேசியாவில் பாலி தீவில் உள்ள ஆகங் எரிமலை வெடித்ததால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எரிமலையில் இருந்து அதிகளவு புகை வெளியேறி வருகிறது. இதன் காரணமாக இந்தோனேசியாவில் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.விடுமுறை தீவு என்றழைக்கப்படும் பாலிதீவிற்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகிறார்கள். தற்போது ஆகங் எரிமலை வெடித்ததால் சுற்றுலாப் பயணிகள் வரத்து குறைந்துள்ளது. எரிமலையில் இருந்து புகை வெளியேறி 2300 அடி உயரத்துக்கு எழுந்துள்ளது.
இதனால் எப்போது வேண்டுமானாலும் இந்த எரிமலை வெடித்து சிதறும் நிலை உள்ளது. எனவே அதன் அருகே தங்கியிருக்கும் கிராம மக்கள் வெளியேறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனைதொடர்ந்து இதுவரையில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குடும்பம் மற்றும் கால் நடைகளுடன் வெளியேறி விட்டனர். 1963ம் ஆண்டு ஆகங் எரிமலை வெடித்ததில் 1600 பேர் உயரிழந்தனர். 50 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இந்த எரிமலை வெடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Post a Comment