யாழ்ப்பாணம், பல்கலைக் கழகத்தின் முன்பாக உள்ள குமாரசாமி வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரை தள்ளிவிழுத்திக் கைவிலங்கிட்டு ஒரு குழு முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்றது என்று தெரிவிக்கப்படுகின்றது.அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் சுமார் 28 வயதுடையவர் என்று அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
பச்சை நிற முச்சக்கர வண்டியில் வந்த சிவில் உடையணிந்த மூவரே இளைஞருக்கு கைவிலங்கிட்டு அழைத்துச் சென்றனர் என்றும் இந்தச் சம்பவம் இன்று மு.ப. 11 மணியளவில் நடந்தது என்றும் கூறப்படுகின்றது.
தம்மால் எவரும் கைது செய்யப்படவில்லை என்று யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் பொலிஸாரின் பாவனையில் பச்சை நிற முச்சக்கர வண்டிகள் எவையும் கிடையாது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
Post a Comment