
ஷங்கர் இயக்கத்தில், ரஜினி நடிக்கும் '2.0' படம், ஜனவரி 26ஆம் தேதி வெளியாவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், திட்டமிட்டபடி ஜனவரியில் படம் வெளியாகாது.
ஏப்ரலில் தான் வெளியாகும் என்று '2.0' ஆடியோ விழா முடிந்த கையோடு செய்திகள் வெளியாகின. இந்த செய்தியை தயாரிப்பு நிறுவனம் மறுத்து வந்தது.
அதேசமயம், 2.0 படத்தின் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகரான அக்ஷய்குமாருடைய நடிப்பில் பாலிவுட்டில் உருவாகியிருக்கும் 'பேட்மேன்' படம் ஜனவரி 26-ல் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னரே 2.0 படம் ஜனவரியில் ரிலீஸாவதில் சிக்கல் இருப்பது தெரிய வந்தது.
பிறகு வேறுவழியில்லாமல்,. '2.0' பட ரிலீஸை ஏப்ரலுக்கு மாற்றியிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்தது லைகா புரொடக்ஷன் நிறுவனம்.
அந்த அறிவிப்பில் எந்த தேதி என்ற விவரம் இல்லையென்றாலும், டிரேட் வட்டாரங்களில் நாம் விசாரித்தவரை ஏப்ரல் 27ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்யவே '2.0' டீம் திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்தது.
இந்நிலையில் ஏப்ரல் மாதம் 2.0 படத்தை வெளியிட தெலுங்கு பட தயாரிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அந்த தேதிகளில் நேரடி தெலுங்குப்படங்களை வெளியிட திட்டமிட்டுள்ளதால் 2.0 படத்தை வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
Post a Comment