உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வாக்களிப்பு பி.ப. 4 மணிக்கு முடிவடைந்ததுடன், வாக்களிப்பு நிலையத்திலேயே பி.ப. 5 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் உடனடியாக ஆரம்பமாகும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இலங்கையில் நடைபெறும் மிகவும் முக்கியமானதும் பெரிய அளவிலான தேர்தலும் இதுவாகும். முன்னர் சகல சபைகளுக்கும் ஒரே தடவையில் தேர்தல் நடத்தப்படவில்லை.
வேட்புமனுத் தாக்கல் இறுதி தினத்திலோ அல்லது குறித்த காலத்திலோ வேட்பாளருக்கு பாதிப்புகள் ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள், வாகனப் பேரணிகள் நடத்துவது தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செயற்படும் நபர்களை கைது செய்ய வேண்டும் என்று பொலிஸாருக்கு நாம் அறிவுறுத்தியுள்ளோம்.
அதேபோல் பொலிஸார் இடம்மாற்றம் தொடர்பில் எந்தச் சிக்கலும் இல்லை. இலங்கை முழுவதற்கும் தேர்தல் நடத்தப்படுகின்றது. எங்கு மாற்றினாலும் சகலரும் கடமையில்தான் இருப்பார்கள். சில பொய்யான காரணிகளைக் கூறி விமர்சிக்க முடியாது- என்றும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment