இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா ஆகியோரது திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி தனது நீண்ட நாள் தோழியான பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த வாரத்தில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும், இந்த திருமணம் இத்தாலியில் நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதுதொடர்பாக ஆங்கில நாளிதழ் ஒன்றில், “விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடியின் திருமணம் இத்தாலியின் டஸ்கனி நகரில் உள்ள பாரம்பரியமிக்க ரிசார்ட் ஒன்றில் நடைபெற உள்ளது. இதற்காக அந்த ரிசார்ட் அலங்கரிக்கப்பட்டு வருகிறது. பஞ்சாபி முறைப்படி இந்த திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது’‘ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை திருமணத்துக்கான பணிகளை மேற்கொண்டுவரும் ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்காகவே மணமக்களும், அவர்களது குடும்பத்தினரும் இத்தாலிக்கு சென்றுள்ளதாகவும், திருமணம் முடிவடைந்து வரும் 26-ம் தேதி மும்பையில் பிரம்மாண்டமான அளவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் இதுதொடர்பான தகவல்களை விராட் கோலி, அனுஷ்கா சர்மா தரப்பினர் உறுதி செய்யவில்லை
Post a Comment