Ads (728x90)

பிரபல நடிகரும், மறைந்த முன்னாள் ஆந்திர முதல்வருமான என்.டி.ராமாராவின் வாழ்க்கை வரலாறு, தெலுங்கில் படமாக தயாராகிறது. என்டிஆர், நடிராக இருந்து அரசியலில் பிரவேசித்து வெற்றி பெற்றது வரையிலான முக்கிய விசயங்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது. இந்த படத்தில் என்டிஆரின் மகனான பாலகிருஷ்ணா நாயகனாக நடிக்கிறார்.

தேஜா இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 28-ம் தேதியான இன்று ஐதராபாத்திலுள்ள ராமகிருஷ்ணா ஸ்டுடியோவில் தொடங்குகிறது. தற்போது கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஜெய்சிம்ஹா படத்தில் நடித்துள்ளார் பாலகிருஷ்ணா. ஜனவரி 12-ம் தேதி இந்த படம் வெளியாகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget