உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை நடத்துவதில் இருந்த தடைகள் தகர்ந்துள்ளதால் தேர்தற் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. விரைவில் ஏட்டிக்குப் போட்டியாகக் கட்சித் தாவல்கள் இடம்பெறவுள்ளதால் கொழும்பு அரசியற் களத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.மகிந்த அணியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட மேலும் சிலர் மைத்திரி அணியிலும், ஐக்கிய தேசியக் கட்சியுடனும் இணையவுள்ளனர்.
அதேபோல் கூட்டரசிலுள்ள உறுப்பினர்கள் சிலர் மகிந்த அணியின் பக்கம் தாவவுள்ளனர். இது தொடர்பான பேச்சுக்கள் ஒருபுறத்தில் மிகவும் இரக சியமான முறையில் நடைபெற்றுவரும் நிலையில் மறுபுறத்தில் தாவல்களைத் தடுப்பதற்குரிய சமரசப்பேச்சுக் களும் இடம்பெற்றுவருகின்றன.
அரசுடன் கைகோர்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு பிரதியமைச் சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளன. சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சுப் பதவி மகிந்த அணியிலுள்ள முக்கிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு விரைவில் வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
Post a Comment