தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்களாக இருந்து மறுவாழ்வு பெற்ற போராளிகள் அரசியல் கட்சிகளை உருவாக்கியுள்ளதுடன், அரசியலிலும் ஈடுபடுகின்றனர். இதுவே, முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இலக்காக இருந்தது என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தனது கீச்சகப் பதிவில் தெரிவித்துள்ளார்.மறுவாழ்வுபெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் அரசியலில் ஈடுபட்டு, அரசியற் கட்சிகளை உருவாக்குகின்றனர். இதுவே முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் இலக்காகவும் இருந்தது.
சாதாரண மக்கள் அரசியலில் ஈடுபட்டு, அரசியல் செயற்பாடு மூலமாகத் தீர்வுகளைப் பெற எத்தனிப்பதே உண்மையான நல்லிணக்கம் என்று அவர் தனது பதிவில் மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment