நிதியமைச்சர் அருண் ஜெட்லி பெயரை வேண்டுமென்றே மாற்றி டுவிட்டரில் பதிவிட்டதாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் மீது பா.ஜ., எம்.பி., பூபேந்ததிர யாதவ் உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.அவர் தனது தீர்மானத்தில், காங்கிரஸ் தலைவர் வேண்டுமென்றே, தவறாக, அவமதிக்கும் வகையில் ஜெட்லி பெயரை மாற்றியுள்ளார். இது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வர தகுதி பெற்றது எனக்கூறியிருந்தார்.
இது குறித்து அவை தலைவர் வெங்கையா நாயுடு கூறியதாவது: பூபேந்திர யாதவ் கொண்டு வந்த உரிமை மீறல் தீர்மானம் எனது ஆய்வில் உள்ளது. இது குறித்து ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும். இந்த தீர்மானத்தை முழுதும் படித்து பார்த்து உரிய முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
டுவிட்டரில்
குஜராத் தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்தார். இதனால், பார்லிமென்டில் அமளி ஏற்பட்டது. அப்போது, பிரச்னையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி ராஜ்யசபாவில் பேசுகையில், மன்மோகன் சிங் நாட்டுப்பற்று குறித்து மோடி கேள்வி எழுப்பவில்லை எனவும், அவரை உயர்ந்த இடத்தில் நாங்கள் வைத்திருப்பதாகவும் கூறினார்.
இது தொடர்பாக ராகுல் டுவிட்டரில் பிரதமர் மோடி என்ன பேச வேண்டும் என நினைத்தாரோ அதனை பேசவில்லை. எதைப்பேசினாரோ அதைத்தான் பேச வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை என தெளிவுபடுத்திய ஜெட்லிக்கு நன்றி எனக்கூறியிருந்தார். அதில் ஜெட்லியின் பெயரை Arun Jaitley என்பதற்கு பதில் Jaitlie எனக்குறிப்பிட்டிருந்தார்
Post a Comment