உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றிவாகை சூடும் நோக்குடன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட மட்டத்திலான முதலாவது பிரசார கூட்டம் எதிர்வரும் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி கண்டியில் நடைபெறவுள்ளதுடன் இறுதி பிரசார கூட்டம் பெப்ரவரி மாதம் 7 ஆம் திகதி கொழும்பில் நடத்தப்படவுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அனைத்து மாவட்டங்களுக்கும் விஜயம் செய்து பாரியளவிலான பிரசார கூட்டங்களில் கலந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேலும் எதிர்வரும் 6 ஆம் திகதி கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் பங்காளி கட்சிகளுடன் ஒன்றிணைந்து பாரிய மாநாடொன்றை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து அடுத்த கட்ட பிரசார பணிகள் முன்னெடுக்கப்படும் என்று தெரியவருகின்றது.
Post a Comment