* வயிறு முட்ட சாப்பிடுவது என்பது ஒரு தவறான உணவு முறை. சரியான நேரத்தில், சரியான அளவு உணவு உட்கொள்வதே முக்கியம்.* சாப்பிடும்போது உணவை நன்கு மென்று உண்பது அவசியம். ‘நொறுங்கத் தின்றால் நூறு வயது’ என்ற பழமொழிக்கேற்ப நன்றாக மென்று உண்ணும்போது EP, Ghrelin போன்ற மரபணுக்கள் சிறப்பாக செயல்பட்டு உணவு செரிமானத்துக்கு உதவி புரிகிறது.
* கொழுப்பு மற்றும் எண்ணெய்களைத் தேர்வு செய்யும்போது அதிக கவனம் செலுத்த வேண்டும். FADS 1, APOA5 போன்ற மரபணுக்கேற்றவாறு எண்ணெய்களை தேர்வு செய்வது மிகச் சிறப்பாகும்.
* முட்டை, சோளம், ஆப்பிள், ப்ரோக்கோலி போன்ற உணவுகளில் காணப்படும் குரோமியம் (Chromium) இன்சுலின் உணர்திறனை அதிகப்படுத்த உதவி புரிகிறது. இவை TCF7L2 ஜீன், இன்சுலின் செயல்பாட்டை கட்டுப்படுத்த உதவும் மரபணு. இவ்வாறு ஒரு வகையான TCF7L2 மரபணு கொண்டவர்கள் குரோமியம் உள்ள உணவுகளை உட்கொண்டால் பயனடைவார்கள்.
* L-Arginine உள்ள உணவுகளான வேர்க்கடலை, வால்நட்ஸ், சூரியகாந்தி பூ விதைகள், கொண்டைக்கடலை, பச்சைப்பயறு போன்றவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்க உதவுவதன் மூலம் எடையையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது.
மரபியல் என்பது பருமனைத் தடுக்கும் ஒரு சிறப்பான வழி.
எனினும் சரியான அளவு, ஊட்டச்சத்துள்ள உணவுமுறைகள், உடற்பயிற்சி, நல்ல உறக்கம், பதற்றம் இல்லா வாழ்க்கை, ஹார்மோன் செயல்பாடு போன்ற பலவகை காரணிகள் நம் எடையை தீர்மானிக்கிறது. இன்றைய நவீன காலகட்டத்தில் உங்கள் மரபணுக்களை பற்றி அறிய பல சோதனை முறைகள் வந்துவிட்டன. அவற்றை பயன்படுத்திக் கொண்டு ஆரோக்கியமாக வாழலாம். உடல்பருமன் பிரச்னையிலிருந்தும் விடுபடலாம்.
Post a Comment