கலிபோர்னியா மாகாணத்தில் தொடர்ந்து பரவும் காட்டுத் தீ வீடுகளுக்கு பரவி வருவதால் சுமார் 20,000-க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.கலிபோர்னியாவில் கடந்த இரண்டு நாட்களாக காட்டுத் தீ கடுமையாக பரவி வருகிறது. வனப் பகுதிகளில் பரவியிருந்த காட்டுத் தீ நேற்று இரவு முதல் வீடுகளில் பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணமாக வென்டுரா, சாண்டா பவுலா ஆகிய நகரங்களில் வசித்த சுமார் 20,000 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளனர். சுமார் 26,000 ஏக்கர் பரப்புக்கு மேல் எரிந்து சாம்பலாகியுள்ளதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பள்ளிகளுக்கு விடுமுறை
காட்டுத் தீ வேகமாக பரவி வருவதையடுத்து கலிபோர்னியாவில் 100க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் அம்மாகாணத்திலுள்ள பல்வேறு இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது
Post a Comment