Ads (728x90)

சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வோர், பாது­காப்­புப் படை­யி­னர், நீதித்­து­றை­யி­னர் மற்­றும் ஏனைய அதி­கார சபை­கள் தனி­ந­பர் சுதந்­தி­ரத்துக்கான உரி­மை­க­ளுக்கு இலங்­கை­யில் இன்­னும் மதிப்­ப­ளிக்­க­வில்லை, என்று தன்­னிச்­சை­யான தடுத்­து­வைத்­தல்­கள் தொடர்­பான ஐக்­கிய நாடு­கள் சபை­யின் நட­வ­டிக்கை தூதுக்­குழு காட்­ட­மா­கத் தெரி­வித்­துள்­ளது.

தன்­னிச்­சை­யான தடுத்­து­வைத்­தல்­கள் தொடர்­பி­லான ஐ.நாவின் மூவ­ர­டங்­கிய தூதுக்­குழு கடந்த 4ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை இலங்­கைக்கு உத்­தி­யோ­க­பூர்வ பய­ணம் மேற்­கொண்­டி­ருந்­தது. பயண நிறை­வில் கொழும்­பில் அமைந்துள்ள ஐ.நா. அலு­வ­ல­கத்­தில் நேற்று நடை­பெற்ற ஊடக சந்­திப்­பில் வெளி­யி­டப்­பட்ட ஊடக அறிக்­கை­யில் இந்த விட­யம் குறிப்­பி­டப்பட் டுள்­ளது.

அந்த அறிக்­கை­யில், ஐ.நாவின் மனித உரி­மை­க­ளுக்­கான பொறி­மு­றை­க­ளு­டன் செயற்­ப­டு­வது தொடர்­பி­லும், சித்­தி­ர­வ­தைக்கு எதி­ரான சம­வா­யத்­தின் விருப்­பத்துக்கு­ரிய ஆரம்ப வரை­வுக்­கும் இலங்­கை­யின் இணக்­கப்­பாட்­டை­யும், சாத­க­மான முன்­னெ­டுப்­பு­ க­ளை­யும் ஐ.நா. அங்­கீ­க­ரிக்­கின்­றது.

பன்­னாட்டு மனித உரி­மைச் சட்­டங்­க­ளின்­கீழ் இலங்­கை­யின் கடப்­பா­டுக­ளைச் செயற்­ப­டுத்­து­வது மற்­றும் அர­சின் தேசிய மனித உரி­மை­கள் நட­வ­டிக்­கைத் திட்­டத்­தின் மூலம் வழங்­கப்­பட்­டுள்ள கடப்­பா­டு­களை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கும் உட­னடி நட­வ­டிக்­கை­கள் அவ­சி­ய­மா­கின்­றன.

Post a Comment

Recent News

Recent Posts Widget