வெலிக்கடை சிறைச்சாலையில் உள்ள சாவுத்தண்டனைக் கைதிகள் உட்பட ஏனைய கைதிகளுக்கும் இன்று சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன.சிறைச்சாலையில் இடம்பெற்ற பௌத்த சமய நிகழ்வின் பின்னர், காலை உணவாக அப்பம், இடியப்பம், ரொட்டி போன்ற உணவுகள் வழங்கப்பட்டன.
பொதுவாக சாவுத் தண்டனைக் கைதிகளுக்கும், ஏனைய கைதிகளுக்கும் காலை உணவாக பாண் அல்லது சோறே சிறைச்சாலைகளில் வழங்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில், சுமார் 10 வருடங்களுக்குப் பின்னர் கைதிகளுக்கு இவ்வாறான உணவுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment