தி.மு.க.,வின் பொருளாளராக இருந்த மு.க.ஸ்டாலின், அக்கட்சியின் செயல் தலைவராக பொறுப்பேற்றப் பின், பொருளாளர் பதவி யாருக்கும் கொடுக்கப்படாமல், காலியாகவே உள்ளது.அலைக்கற்றை வழக்கில் இருந்து தி.மு.க.,வின் மகளிர் அணி செயலரான கனிமொழி விடுதலை ஆன பின், பொருளாளர் பதவியை கனிமொழியிடம் கொடுக்க வேண்டும் என, அவரது ஆதரவாளர்கள் கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் இதில்ஸ்டாலினுக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது.
அந்தப் பொறுப்பில், தன்னுடைய ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி அல்லது ஆ.ராஜாவை பொறுப்பில் நியமிக்கலாம் என, ஸ்டாலின் யோசிப்பதாகக் கூறப்படுகிறது. அப்படி, இருவரில் ஒருவரை நியமிக்கும்பட்சத்தில், கனிமொழியால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க முடியாது என்பதோடு, அவர்களை கனிமொழியும் ஏற்றுக் கொள்வார் என்பதால், ஸ்டாலின் அப்படி யோசிக்கிறார் என்கின்றனர், அக்கட்சியினர்.