Ads (728x90)

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்க விரும்பும் மாற்றுத் திறனாளிகள், போக்குவரத்து வசதியைப் பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், நடமாட முடியாத மாற்றுத் திறனாளிகள் தமது வாக்குகளை அளிப்பதற்கு உதவியாக இலவச போக்குவரத்து வசதி செய்து தரப்படவுள்ளதாகவும் அதற்கான விண்ணப்பங்களை, உரிய மருத்துவ அறிக்கையுடன் தேர்தலுக்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகக் கையளித்துவிட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்களை, சம்பந்தப்பட்ட மாற்றுத் திறனாளிகள் நேரடியாகவோ, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அல்லாத ஒருவர் மூலமே விண்ணப்பிக்க முடியும் என்றும் விண்ணப்பங்களை தமது பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரியிடம் கையளிக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதேச தேர்தல் அத்தாட்சி அதிகாரி ஒப்புதல் அளிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு மட்டுமே போக்குவரத்து வசதி செய்து தரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget