ஊழல் மோசடியை ஒழிப்பதற்காக மக்கள் வழங்கிய ஆணையை நிறைவேற்றுவது என்ற நிலைப்பாட்டில் ஐக்கிய தேசியக் கட்சி உறுதியாக இருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்தார்.
திறைசேரி முறி விநியோக விவகாரத்தில் ஆரம்பம் முதல் அரசாங்கம் வெளிப்படையாகவே நடந்து கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார். புத்தாண்டை முன்னிட்டு பியகம பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் கூறினார். திறைசேரி முறி விவகாரம் ஆரம்பத்தில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, பின்னர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டு இந்த ஆணைக்குழுவின் அறிக்கை தற்பொழுது ஜனாதியிடம் கையளிக்கப்ப ட்டுள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையுடனேயே செயற்பட்டு வருகிறது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment