பிரித்தானிய அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசர் எட்வட் 6 நாள் உத்தியோகபுர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (31) நண்பகல் இலங்கை வந்துள்ளார்.இவர் பயணம் செய்த விமானம் இன்று நண்பகல் 12.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையின் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று அவர்கள் இலங்கை வந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எட்வட் இளவரசருடன் அவரது மனைவி உட்பட 7 பேர் கொண்ட குழுவொன்றும் வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
எதிர்வரும் பெப்ருவரி 5 ஆம் திகதி வரையில் இவர்கள் இலங்கையில் தங்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
Post a Comment