தனது நிர்வாகம் தொடர்பாக எழுதப்பட்டுள்ள புத்தகம் முழுவதும் பொய்களால் நிறைந்தது என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கோபமாக கூறியுள்ளார்.அமெரிக்க பத்திரிக்கையாளர் மிச்சேல் உல்ப், அதிபர் ட்ரம்ப் பற்றி புத்தகம் ஒன்றை எழுதியுள்ளார். ‘ட்ரம்பின் வெள்ளை மாளிகைக்குள் கோபக்கனல்’ என்ற அந்த புத்தகத்தில் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக கூறியுள்ளார். இந்த புத்தகம் இன்னமும் வெளியிடப்படவில்லை. எனினும் அதில் இடம் பெற்றுள்ள விவரங்கள் வெளி வந்துள்ளன.
அதில் "அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராக பதவியேற்கும் முன்பாக, 2016-ம் ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி அமெரிக்க ஐடித்துறை நிறுவனங்களின் நிர்வாகிகள், ட்ரம்பை சந்தித்தனர். தேர்தல் பிரச்சாரத்தின்போது, எச்1பி விசாவுக்கு எதிராக பேசிய நிலையில் அத்தகைய நடவடிக்கை எதனையும் எடுக்க வேண்டாம் என அவர்கள் கேட்டுக் கொண்டனர். இதை ஏற்று எச்1பி விசாவுக்கு எதிராக எதையும் செய்யப்பபோவதில்லை என ட்ரம்ப் அவர்களுக்கு உறுதியளித்தார்" என அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபோலவே ட்ரம்ப் பற்றிய பல தகவல்கள் இந்தப் புத்தகத்தில இடம் பெற்றுள்ளன. இதுகுறித்த ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது
"வெள்ளை மாளிகைக்குள் வந்து செல்ல நான் யாருக்கும் அனுமதி வழங்கவில்லை. இந்தப் புத்தகத்தை எழுதியவரிடம் நான் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அவர் எழுதியுள்ள புத்தத்தில் இடம் பெற்றுள்ள அனைத்தும் பொய்களே. அதில் துளியும் உண்மையில்லை. எந்தவித ஆதாரமும் இன்றி, இட்டுகட்டி அந்த புத்தகம் எழுதப்பட்டுள்ளது" எனக் கூறினார்.
முன்னாள் வெளியுறவுத்துறை நிபுணர் ஸ்டீவ் பனான், தனது நெருங்கிய நண்பர், ட்ரம்ப் அதிபர் பதவி வகிக்க தகுதியானவர் தானா? என கேள்வி எழுப்பியதாகவும் அந்தப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனிடையே புத்தகம் வெளியாவதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க ட்ரம்ப் ஆலோசித்து வருகிறார்
Post a Comment