Ads (728x90)

4 நாடுகள் ஹாக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

நியூஸிலாந்தின் தவுரங்கா நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று இந்தியா - ஜப்பான் அணிகள் மோதின. தொடக்கம் முதலே இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய அணிக்கு 7-வது நிமிடத்தில் பெனால்டி ஸ்டிரோக் வாய்ப்பு கிடைத்தது. இதை ரூபிந்தர் பால் சிங் கோலாக மாற்றினார். 12-வது நிமிடத்தில் 2-வது கோலை அறிமுக வீரான விவேக் சாகர் பிரசாத் அடித்தார். இது பீல்டு கோலாக அமைந்தது.

28-வது நிமிடத்தில் விவேக் பிரசாத், ஜப்பான் வீரர்களின் தடுப்பு அரண்களை மீறி மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இதனால் 2-வது கால் பகுதியின் முடிவில் இந்தியா 3-0 என முன்னிலைப் பெற்றது. 35-வது நிமிடத்தில் மன்தீப் சிங் உதவியுடன் தில்பிரீத் சிங் கோல் அடித்தார். 40-வது நிமிடத்தில் ஜப்பானுக்கு பெனால்டி கார்னர் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த அணி அதனை கோலாக மாற்றத் தவறியது.

அடுத்த நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மான்பிரித் சிங் கோலாக மாற்றினார். இதனால் இந்திய அணி 5-0 என்ற வலுவான முன்னிலையைப் பெற்றது. 45-வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் தனது 2-வது கோலை அடித்தார். கடைசி வரை போராடியும் ஜப்பான் அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் போனது. முடிவில் இந்திய அணி 6-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தியா தனது 2-வது ஆட்டத்தில் இன்று பெல்ஜியத்துடன் மோதுகிறது.

Post a Comment

Recent News

Recent Posts Widget