Ads (728x90)

அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலில் இந்திய வம்சாவளி பெண் அருணா மில்லர் (வயது 53) போட்டியிடுகிறார்.

அமெரிக்காவின் நாடாளுமன்றத்தில், மேரிலாண்ட் பகுதி எம்.பியாக இருந்து வரும் ஜனநாயகக் கட்சியின் ஜான் டிலேனே பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து அங்கு ஜூ்ன் 26ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என ஜான் அறிவித்துள்ளார். இதையடுத்து, அந்த இடத்திற்கு, இந்திய வம்சாவளியை சேர்ந்த அருணா மில்லர் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மேரிலாண்ட் மாகாண கீழ்சபை உறுப்பினராக தற்போது உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு முதல் அந்த பதவியில் உள்ளார்.

முதல்கட்டத் தேர்தலுக்கான வேட்புமனுவை தாக்கல் செய்த அவர் இதுகுறித்து கூறியதாவது:

‘எனது சிறு வயதில் பெற்றோருடன் அமெரிக்காவில் குடியேறினேன். இங்கு எனக்கு, நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. மேரிலாண்ட் மாகாண சபை உறுப்பினராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்து. எனது அரசியல் பயணத்தை முன்னெடுத்து செல்ல விரும்புகிறேன்.

அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனுபவம் மற்றும் முற்போக்கு சிந்தனை கொண்ட எம்.பிக்கள் கூடுதலாக தேவை. அதற்கு தகுந்த வகையில் நான் பணியாற்றுவேன் என்ற நம்பிக்கை உள்ளது’’ எனக் கூறினார்.

மேரிலாண்டு எம்.பி தேர்தலில், அருணா மில்லரை தவிர்த்து அமெரிக்காவில் வசிக்கும் ஆப்கனை சேர்ந்த நாடியா ஹஸ்மி உள்ளிட்ட 4 பேர் போட்டியிட போவதாக அறிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்ற கீழவையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் பிரமீளா ஜெயபால் எம்.பியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget