Ads (728x90)

தமிழர் விடுதலைக் கூட்டணியின் ‘சூரியன்’ சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வு, யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்றது.

தேர்தல் விஞ்ஞாபனத்தை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி பெற்றுக்கொண்டார்.

தேர்தல் பிரச்சார கீதத்தை ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் வெளியிட்டு வைக்க ஜனநாயக தமிழரசு கட்சியின் தலைவர் வி.எஸ்.சிவகரன் பெற்றுக்கொண்டார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முண்ணணி ஆகிய கட்சிகள் வேட்பாளர் அறிமுகம் செய்திருக்கும் நிலையிலையே தமிழ்த் தேசிய விடுதலைக் கூட்டமைப்பும் தன்னுடைய வேட்பாளர்களை இன்று அறிமுகம் செய்து வைத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget