தெலுங்கில் ராம்சரண்-சமந்தா நடித்து வரும் படம் ரங்கஸ்தலம். 1985ல் நடக்கும் கிராமத்து கதையில் இந்த படம் உருவாகியிருக்கிறது. இப் படத்திற்காக கோதாவரி ஆற்றங்கரையில் கிராமத்து செட் அமைத்து பல மாதங்களாக இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து வந்தது. இந்த நிலையில், ஜனவரி 24-ந்தேதி இப்படத்தின் டீசர் வெளியானது. வெளியாகி 3நாட்களில் இதுவரை 5மில்லியன் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.ஆனால், இந்த ரங்கஸ்தலம் டீசரில் பட நாயகி சமந்தாவின் கதாபாத்திரம் காணாமல் போயிருந்தது. இது அவர் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்தது. இதையடுத்து இப்படத்தில் சமந்தா மிக வித்தியாசமான ரோலில் நடித்திருக்கிறார். சமந்தாவின் அந்த தனித்துவமான தோற்றம் விரைவில் வெளியிடப்படும் என்று அப்பட இயக்குனர் சுகுமார் அறிவித்துள்ளார்.
மேலும், ஈரம் ஆதி இப்படத்தில் அதிரடி வில்லனாக நடித்துள்ளார்.
Post a Comment