Ads (728x90)

நட்சத்திர கலைவிழாவில் பங்கேற்க மலேசியா சென்றுள்ள நடிகர் ரஜினி, அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்தார்.

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. இதில் 200-க்கும் மேற்பட்ட நடிகர்கள் பங்கேற்க மலேசியா சென்றுள்ளனர். அவர்களுடன் நடிகர் ரஜினியும் சென்றுள்ளார்.

நேற்று மலேசியா சென்றடைந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர். அதன் வீடியோ வெளியான நிலையில், அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார். அதன் புகைபடங்கள் நேற்று வெளியாயின. இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என ரசாக் தனது டுவிட்டரில் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் வந்த நஜிப் ரசாக் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்பொழுது மலேசிய பிரதமர் ரஜினிக்கு விருந்து அளித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget