Ads (728x90)

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் பரப்­பு­ரை­யில் தனிப்­பட்ட அல்­லது பொது நிதி­யில் இருந்து பணத்­தையோ அல்­லது பொருள் மானி­யத்­தையோ வழங்­கும் வேட்­பா­ளர்­கள் மீது கடு­மை­யான சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும் என்று தேர்­தல்­கள் ஆணைக்­குழுத் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரிய எச்­ச­ரித்­துள்­ளார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தேர்­தல் சட்­டங்­க­ளின் படி பரப்­பு­ரை­க­ளின் போது வேட்­பா­ளர்­கள் மானி­யங்­களை வழங்­கு­வது சட்­ட­வி­ரோ­த­மா­கும். அது இலஞ்ச வழக்­காக கரு­தப்­ப­டும். தேர்­தல் திணைக்­க­ளத்­தின் உத்­த­ர­வு­களை அரச அதி­கா­ரியோ அல்­லது அரச நிறு­வ­னமோ மீறி­னால் அவர்­க­ளுக்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்.

மத அமைப்­பு­க­ளுக்கு நிதி வழங்­கு­வது, கல்­விக்­கான பொருள்­களை வழங்­கு­வது போன்ற நட­வ­டிக்­கை­க­ளில், அர­சி­யல் கட்­சி­கள், வேட்­பா­ளர்­கள் ஈடு­ப­டு­வது அவ­தா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

தேர்­தல் பரப்­பு­ரை­யின் ஒரு பகு­தி­யாக இத்­த­கைய நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தாக முறைப்­பா­டு­ கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

அரச நிதி­யி­லான உத­வி­களை பொது­மக்­க­ளுக்கு வழங்­கு­வதை எதிர்­வ­ரும் பெப்­ர­வரி 15ஆம் திகதி வரை இடை­நி­றுத்தி வைக்­கு­மாறு பிர­தேச செய­ல­கங்­கள் மற்­றும் ஏனைய அரச நிறு­வ­னங்­க­ ளுக்கு தேர்­தல் ஆணைக்­குழு அறி­வு­றுத்­தி­யுள்­ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget