புங்குடுதீவில் கடற்படை வாகனம் மோதி சிறுமி பலி!
கடற்படை பவள் கவச வாகனம் மோதியதில் 9 வயது மாணவி உயிரிழந்தார். தரம் 4 இல் கல்வி கற்கும் திருவானந்தன் கேசனா (வயது-9) என்ற மாணவியே உயிரிழந்தார்.
மாணவியை ஏற்றிவந்தவர் காயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தனது மாமனாருடன் றோமன் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்று கொண்டிருந்தபோதே எதிரே வந்த கவச வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து நடந்தது என்று தெரிவிக்கப்பட்டது.



Post a Comment