Ads (728x90)

மட்டக்களப்பு - கல்லடிப் பிரதேசத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்களான அண்ணனும் தம்பியும் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு கல்லடி  வாவியிலிருந்து கடந்த வெள்ளிக்கிழமை (26.01.2018) அதிகாலை சடலமாக மீட்கப்பட்ட இலங்கை மின்சார சபையின் பொறியியலாளரான கணேசமூர்த்தி உமாரமணனின் இளைய சகோதரனான இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும்  ஊழியரான கணேசமூர்த்தி சாரோஜிதன் (வயது 21) என்பவரே நேற்று ஞாயிற்றுக்கிழமை (28.01.2018) தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அண்ணன் இறந்த துயரத்தால் மனமுடைந்திருந்த நிலையிலேயே தம்பி இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஒரே குடும்பத்தில் இவ்வாறு அடுத்தடுத்து இடம்பெற்ற அகால மரணங்களால் அந்தக் குடும்படும் கல்லடி கிராமமும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

கடந்த 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போன இலங்கை மின்சார சபையின் பொறியியலாளரும் இரு குழந்தைகளின் தந்தையுமான கிருஷ்ணன் கோயில் வீதி, கல்லடியைச் சேர்ந்த, கணேஷமூர்த்தி உமாரமணன் (வயது 34) என்பவர் அடக்கம் செய்யப்பட்ட மறுதினம் அவரது தம்பி, வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

உடற்கூறு பரிசோதனைக்காக சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget